/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/3_103.jpg)
'பாகுபலி' படங்களின் வெற்றிக்குப் பிறகு இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் இயக்குநர் ராஜமௌலி.இவர், தற்போது 'ஆர்ஆர்ஆர்' என்ற படத்தை இயக்கி வருகிறார். டி.வி.வி.தனய்யா தயாரித்து வரும் இப்படத்தில், ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பாட், அஜய் தேவ்கான், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
இந்தாண்டு அக்டோபர் மாதம் படத்தைத் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள படக்குழு, படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், ராஜமௌலி ஹாலிவுட் திரையுலகின் பிரபல சண்டை கலைஞரான நிக் பவலுடன் கைகோர்த்துள்ளார். இவர், 'ஆர்ஆர்ஆர்' படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் இடம்பெற்றுள்ள அதிரடியான சண்டைக்காட்சியை இயக்கவுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் ராஜமௌலியும் நிக் பவலும் அது தொடர்பான விவாதத்தில் ஈடுபடும் காணொளி ஒன்று தற்போதுவைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)